அன்புக்குரிய வாசகர்களே,
1. நமது ``தமிழ் சட்ட நாளேடு (tamillawjournal.com)’’ சுமார் நான்கு வருடங்களுக்கு
முன் 01.10.2020 அன்று `தினம் ஒரு தீர்ப்பு’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
2. பல்வேறு சமயங்களில் தடைகள் ஏற்பட்டாலும், இதுவரை சுமார் 300 தீர்ப்புகளை
தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.
3. தமிழில், சட்ட நாளேடு என்பது அநேகமாக தமிழ்நாட்டில் இதுதான் முதலாவது
இருக்கும் என்று எண்ணுகிறோம்.
4. தமிழ் சட்ட நாளேட்டில் வெளிவரும் தீர்ப்புகளைப் படிப்பதற்கென்று தனியாக நீங்கள்
நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
5. பேருந்துக்கோ, ரயிலுக்கோ காத்திருக்கும் கொஞ்ச நேரத்தில் அல்லது கேண்ட்டீனில்
காபி அருந்தும் நேரத்திலோ கூட உங்கள் செல்போனிலேயே படித்துவிடும் வகையில்
எளிய தமிழ் நடையில், அதே வகையில் தீர்ப்பின் சாரம் குறைந்துவிடாமலும் ``தமிழ்
சட்ட நாளேடு‘’இருக்கும்.
6. பெரும்பாலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தின் ஒவ்வொரு பத்தியின் கீழும் அதன்
ஆங்கில மூலத்தையும் தருகிறோம். ஆக, தீர்ப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே
நேரத்தில் படித்துவிட முடியும்.
7. தமிழ் மொழியாக்க வார்த்தை கடினமாக இருக்குமானால், அந்த இடத்தில்,
பழக்கப்பட்ட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறோம்.
8. எனவே, நமது தமிழ் சட்ட நாளேட்டை தவறாமல் வாசிப்பவர்கள், தினசரி ஒரு தீர்ப்பு
என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 250 தீர்ப்புகளை சுலபமாக வாசித்து விட முடியும்.
9. மேலும், வழக்கமாக ஆங்கிலத்தில் தீர்ப்புகளைப் படிப்பவர்கள் கூட, தமிழ் சட்ட
நாளேட்டைப் படிக்கும்போது, தீர்ப்பின் சாரத்தை எளிதில் புரிந்துகொண்டு,
ஆங்கிலத்தில் மேலும் ஆழமாக படிக்க முடியும்.
10. நமது நாளேட்டில் வரும் தீர்ப்புகளை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்ட மாணவர்கள்,
சட்டத்துறை சார்ந்தவர்கள் மற்றும் சட்ட ஆர்வலர்களைத் தாண்டி, சாதாரண
மக்களும், முக்கியமாக பள்ளி மாணவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று
விரும்புகிறோம்.
11. சட்டப் புத்தகங்களைப் படிப்பதும், புரிந்துகொள்வதும் எளிமையாக இருப்பதில்லை
என்ற நிலையை முற்றிலுமாக மாற்றி, சாதாரண மக்களும், பள்ளி மாணவர்களும் கூட
சட்டத்தை ஒரு செய்தித்தாளை படிப்பதுபோல் எளிமையாக படிக்கும்வகையில்
தரவேண்டும் என்பதுதான் தமிழ் சட்ட நாளேட்டின் முதலும், முடிவுமான
நோக்கமாகும்.
12. அதன்படி, சாதாரண மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு நாளேடாகவும் நமது ``தமிழ்
சட்ட நாளேடு’’ இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.
13. என்றாலும், தமிழ் சட்ட நாளேட்டில் வெளியிடப்படுபவை தீர்ப்புகளின் சுருக்கம்
மட்டுமே. குறிப்பிட்ட தீர்ப்பு, நமது வழக்குக்கு பொருந்துமா என்பதை அறிய அந்த
தீர்ப்பை முழுமையாக படித்தறியும்படி கேட்டுக் கொள்கிறோம்.
14. தமிழ் சட்ட நாளேடு மேலும் சிறப்பாக வெளிவருவதற்கு, தங்களின் கருத்துகளையும்,
ஆலோசனைகளையும் எப்போதும் வரவேற்கிறோம்.
15. தமிழ் சட்ட நாளேடுக்கான ஆண்டு சந்தா ரூ.1,000/-
இப்படிக்கு
ஆசிரியர், ``தமிழ் சட்ட நாளேடு’’
tamillawjournal.com
Lakshmi Law Associates
வெளியீடு : LAKSHMI LAW ASSOCIATES
ஆசிரியர் : வழக்கறிஞர் கோ.புகழ்வேந்தன், B.Com.,M.A.,M.L.,
உதவி : வழக்கறிஞர் எம்.சங்கர், B.A.,B.L.,

