தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 25.02.2021 ISSUE No.70
PETITION FOR EARLY DISPOSAL OF SUIT
* வழக்கை விரைந்து முடிக்க
சிவில் நீதிமன்றத்துக்கு
உத்தரவிட வேண்டும் என்று மட்டுமே
வேண்டி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* எனவே, எதிர்மனுதாரர்களுக்கு
நோட்டீஸ் கொடுக்கத் தேவையில்லை.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 24.02.2021 ISSUE No.69
SARFAESI ACT - CIVIL COURT JURISDICTION - – TO GRANT INTERIM STAY
* SARFAESI Act-ன் கீழ்,
சொத்து விற்பனை நடவடிக்கைக்கு
எதிராக சிவில் நீதிமன்றம்
தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.02.2021 ISSUE No.68
SECTION 482 CrPc – DIRECTION – FOR REGISTRATION OF FIR -HIGH COURT JURISDICTION
* முதல் தகவலறிக்கை
பதிவு செய்யும்படி போலீசாருக்கு
உத்தரவிடுவதற்கு, குற்றவியல் நடைமுறைச்
சட்டப் பிரிவு 482-ன்கீழ்,
உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.02.2021 ISSUE No.67
INTER-CASTE MARRIAGE – ARTICLE 21 - RIGHT TO LIFE
* மேஜரான இருவர் திருமணம்
செய்து கொள்ள முடிவெடுக்கும்போது,
அந்த திருமணத்துக்கு அவர்களது குடும்பம்
அல்லது சமூகத்தின் சம்மதம் தேவையில்லை ;
* விசாரணை அதிகாரியின் அச்சுறுத்தலுக்கு
கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் ;
* இதுபோன்ற வழக்குகளை எவ்வாறு
கையாள்வது என்பது குறித்து அந்த அதிகாரிக்கு
கவுன்சலிங் தரப்பட வேண்டும்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 18.02.2021 ISSUE No.66
HUNGER STRIKE - NOT ATTEMPT TO SUICIDE
* மனுதாரர் உண்ணாநிலைப்
போராட்டத்தில் ஈடுபட்டதை
தற்கொலை முயற்சி என்று
குற்றம் சுமத்த முடியாது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 17.02.2021 ISSUE No.65
CULPABLE HOMICIDE – NOT AMOUNTING TO MURDER
* திடீரென தகராறு ஏற்பட்டதில்,
மங்குராமை கோகன்
விஷ்வாஸ் தாக்கியுள்ளார் ;
* அவருக்கு, கொலை செய்ய வேண்டும்
என்று உள்நோக்கம் இருந்ததாக
அரசுத்தரப்பு குற்றம்சாட்டவில்லை ;
* அதற்காக, அவர் முன்கூட்டியே
திட்டமிட்டதாக ஆதாரம் எதுவுமில்லை ;
* * * * *
* எனவே, பிரிவு 302–ன் கீழான
குற்றச்சாட்டை 304-I–ஆக மாற்றுகிறோம்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 16.02.2021 ISSUE No.64
CONDONATION OF DELAY
* ``பதில் மனு தாக்கல் செய்வதற்கான
அவகாசத்தை 30 நாட்களுக்கு பிறகு,
15 நாட்களுக்குமேல் நீட்டிக்க நுகர்வோர்
நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை’’
- உச்ச நீதிமன்ற
அரசியல்சாசன அமர்வு.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 15.02.2021 ISSUE No.63
GOONDAS ACT
* Remand Order பிராந்திய மொழியில்
சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை.
அதனால், தனது தரப்பை அழுத்தமாக
முன்வைக்க முடியவில்லை ;
* எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை
ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்
தரப்பில் வாதிடப்பட்டது ;
* வழக்கு ஆவணங்களை பரிசீலிக்கையில்,
arrest intimation பிராந்திய மொழியில்
சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை
என்பது தெளிவாகிறது ;
* எனவே, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்,
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு
ரத்து செய்யப்படுகிறது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.02.2021 ISSUE No.62
Tamil Nadu Industrial Establishment (Conferment of Permanent Status To Workmen) Act
* நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள்
நடைமுறைப்படுத்தாத காரணத்தால்,
மனுதாரர்கள் பொருளாதார மரணத்தை
(economical death) சந்திக்க நேர்ந்துள்ளது ;
* தொழிலாளர்களின் வலியையும்,
வேதனையையும் உணர வேண்டும்
என்பதற்குத்தான், சம்மந்தப்பட்ட
அதிகாரி, நீதிமன்றத்தில்
(அனைத்து விசாரணை நாட்களிலும்)
ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.02.2021 ISSUE No.61
NEGOTIABLE INSTRUMENTS ACT
* காசோலை மோசடி வழக்குகளில்,
‘’விசாரணை நீதிமன்றம் விதித்த இழப்பீடு
அல்லது அபராதத்தில் குறைந்தபட்சம்
20 சதவீதத்தை நீதிமன்றத்தில்
டெபாசிட் செய்ய வேண்டும்’’
என்று எதிரிகளுக்கு நிபந்தனை விதிக்க ;
* மாற்றுமுறை ஆவண சட்டப் பிரிவு 148-ல்
முதல்-மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ;
* மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 148
01.09.2018 அன்று அமலுக்கு வந்தது
என்றாலும், அதற்கு முன்னதாக,
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட காசோலை மோசடி
வழக்குகளுக்கும் இந்தப் பிரிவு பொருந்தும்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.02.2021 ISSUE No.60
INDIAN EVIDENCE ACT – SEC 106 – BURDEN OF PROVING FACT
* கணவரும், மனைவியும்,
குழந்தையுடன் தனியே
வசித்து வந்துள்ளனர் ;
* வீட்டுக்குள் எந்த சூழ்நிலையில்,
எவ்வாறு தாக்கப்பட்டு மனைவி
கொல்லப்பட்டார் என்பது கணவருக்கு
மட்டுமே தெரியும் என்ற நிலையில்,
அதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு கணவருக்கு உள்ளது ;
* கணவர் தரப்பில் விளக்கம் ஏதும்
தரப்படாத நிலையில், அவர்தான் குற்றவாளி
(assailant of the deceased) என்பது
சந்தேகத்துக்கு இடமின்றி தெரிகிறது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.02.2021 ISSUE No.59
TRANSFER PETITION – RES JUDICATA
* ஏற்கெனவே Transfer Petition
தள்ளுபடி செய்யப்பட்டதாலேயே,
மீண்டும் Transfer Petition தாக்கல்
செய்ய முடியாது என்று கூற முடியாது ;
* அதே சமயம், மனுதாரர் கூறும்
சூழ்நிலை மாற்றங்களும், மறுபடியும்
Transfer Petition தாக்கல் செய்வதற்கான
காரணங்களும், ஏற்கும்படி இருக்க வேண்டும்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.02.2021 ISSUE No.58
VOLUNTARY RETIREMENT
* தானாக முன்வந்து பணி ஓய்வு
பெற அனுமதி கேட்டு,
வங்கி நிர்வாகத்திடம் காரிவால்
சமர்ப்பித்துள்ள விண்ணப்பம்,
Regulation 29ல் கூறப்பட்டுள்ளபடியே உள்ளது ;
* பணி ஓய்வுக்குப் பிறகு,
முதலாளி-தொழிலாளி உறவு முறை
(employer-¬employee relationship)
கிடையாது என்பதால், அதன்பிறகு,
காரிவாலுக்கு எதிராக எடுக்கப்பட்ட
துறைரீதியான நடவடிக்கைகள்
நிலைக்கத்தக்கதல்ல (Null and void).
View